பண்ணைக்குட்டைகள் அமைக்க  ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர்

விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்திட ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.

விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்திட ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ஆணைப்படி கடலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் 250 பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 250 பண்ணைக்குட்டைகளுக்கு, 110 குட்டைகள் அமைக்க மட்டுமே விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
30மீ. நீளம், 30மீ. அகலம், 2மீ. ஆழம் என்ற கொள்ளளவில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படவுள்ளன. மழைக் காலத்தில் வழிந்தோடும் நீரை பண்ணைக்குட்டைகளில் சேமித்து வைத்து கோடை காலங்களில் விவசாயத்துக்கு பயன்படுத்தி அதிக மகசூல் அடையலாம். பண்ணைக்குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாக இருப்பதால் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு  கொள்ளலாம். அதன்படி, கடலூர் கோட்டத்தினர் 04142-292770, சிதம்பரம்- 04144-232707, விருத்தாசலம்- 04143-238242 என்ற எண்களிலும், விருத்தாசலத்தில் உள்ள பாசனப்பகுதி மேம்பாடு நீர் மேலாண்மை திட்ட உதவி செயற்பொறியாளரை 94435 59058, 75982 14280 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com