சுடச்சுட

  


  மத்திய அரசைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி
  யினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  கர்நாடகம் மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டு, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் 16 பேர் ராஜிநாமா கடிதம் அளித்தனர். இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசே காரணம் எனக் கூறியும், இதேபோல, கோவா மாநிலத்திலும் குதிரை பேர அரசியலில் பாஜக ஈடுபடுவதைக் கண்டிப்பதாகக் கூறியும், காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரவிக்குமார், கிஷோர்குமார், செல்லகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  முன்னதாக, மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.குமார் வரவேற்றார்.  மாவட்ட பொருளாளர் ராஜன், ஓவியர் ரமேஷ், வட்டாரத் தலைவர் ரமேஷ்ரெட்டியார், நெல்லிக்குப்பம் திலகர், குறிஞ்சிப்பாடி ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  சிதம்பரம்: இதேபோல, மத்திய பாஜக அரசைக் கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நகர் பெரியசாமி தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.ஐ.மணிரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர் 
  ஏ.ராதாகிருஷ்ணன், நகர  தலைவர் என்.பாலதண்டாயுதம், புவனகிரி கே.ஜி.குமார், தவிர்த்தாம்பட்டு விஸ்வநாதன், கிள்ளை சத்தியமூர்த்தி, வெங்கடேசன், ஜி.கே.குமார், லட்சுமணன் உள்ளிட்டோர்  கண்டன உரையாற்றினர். நகரச் செயலர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai