சுடச்சுட

    


    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வருகிற 23-ஆம் தேதி பேரணி நடத்துவது என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்தது. 
     காவிரி படுகையை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் தலைமை வகித்தார். திமுக தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி, காங்கிரஸ் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன், விசிக மாநில அமைப்புச் செயலாளர் தி.ச.திருமார்பன், தவாக மாவட்டச் செயலர் த.ஆனந்த், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வி.இளங்கீரன், மதிமுக மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறை வாயு, நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களை எடுப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னைக்குத் நிரந்தர தீர்வு காணப்படும் வரை அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. 
    மேலும், இந்தத் திட்டங்களை மத்திய அரசு கைவிட்டு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வருகிற 23-ஆம் தேதி பொதுமக்கள், விவசாய சங்கங்கள் பங்கேற்கும் பேரணி நடத்துவது. 
    இதுதொடர்பாக, வருகிற 15-ஆம் தேதி முதல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
     திமுக நகரச் செயலர் கே.எஸ்.ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோ.மாதவன், மார்க்சிஸ்ட் நிர்வாகி அமர்நாத், குடியிருப்போர் கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன், தவாக மாணவரணி தலைவர் பா.அருள்பாபு, மக்கள் அதிகாரம் அமைப்பு து.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai