தமாகா நிர்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 19th July 2019 02:21 AM | Last Updated : 19th July 2019 02:21 AM | அ+அ அ- |

கடலூர் மத்திய மாவட்ட தமாகா நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.புரட்சிமணி தலைமை வகித்துப் பேசினார். சிதம்பரம் நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட நிர்வாகிகள் கே.நாகராஜ், ராஜா சம்பத்குமார், தில்லை கோ.குமார், கே.ராஜலட்சுமி, தில்லைச் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலர் ஏ.எஸ்.முனவர்பாஷா, மூத்த துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், பொதுச் செயலர்கள் எஸ்.ஜெயச்சந்திரன், ஏ.எஸ்.வேல்முருகன், கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஆர்.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிர்வாகிகள் பாபு, மகளிரணி ஜனகம், எஸ்.எஸ்.நடராஜன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.