மாவட்ட அலுவலர்கள் பணியிட மாற்றம்
By DIN | Published On : 19th July 2019 02:20 AM | Last Updated : 19th July 2019 02:20 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர், விளையாட்டு அலுவலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி, கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலராகச் செயல்பட்டு வந்த ந.தட்சிணாமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக நாகப்பட்டினம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கு.வரலட்சுமி கூடுதல் பொறுப்பாக ஏற்றார். புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதேபோல, கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக செயல்பட்டு வந்த மா.ராஜா, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கடலூர் மாவட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.