Enable Javscript for better performance
மரத்தில் லாரி மோதியதில் தொழிலாளி பலி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மரத்தில் லாரி மோதியதில் தொழிலாளி பலி

    By DIN  |   Published On : 23rd July 2019 08:35 AM  |   Last Updated : 23rd July 2019 08:35 AM  |  அ+அ அ-  |  

    மரத்தில் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
    விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள பைந்தந்துறையைச் சேர்ந்தவர் செல்வராசு மகன் பாண்டிதுரை (24). இவர், லாரியில் நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிக் கொண்டு, விருத்தாசலம் நோக்கிச் சென்றார். திங்கள்கிழமை அதிகாலை  வேப்பூர் - விருத்தாசலம் சாலையில் சென்ற போது, சாலையோர மரத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளானது. 
    இதில், பாண்டிதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். லாரியில் பயணம் செய்த மணிகண்டன், ஓட்டுநர் ராஜவேல் ஆகியோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
    மற்றொரு விபத்தில் 2 பேர் காயம்: வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை மகன் சூர்யா (19), பெரியசாமி மகன் ராஜா (23) ஆகியோர் பைக்கில் திருச்சி - சென்னை சாலையில் சேப்பாக்கம் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    இந்த இரு விபத்துகள் குறித்து, வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp