வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 24th July 2019 09:00 AM | Last Updated : 24th July 2019 09:00 AM | அ+அ அ- |

விருத்தாசலத்தில் வழக்குரைஞர்கள் சார்-ஆட்சியரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் சார்-ஆட்சியராகச் செயல்பட்டு வருபவர் எம்.எஸ்.பிரசாந்த். இவர், இரு தரப்பினரிடம் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடர்பாக உள்கோட்ட நடுவர் என்ற முறையில் செவ்வாய்க்கிழமை தனது அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். அப்போது ஒருதரப்பினருக்கு ஆதரவாக விருத்தாசலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பரமேஸ்வரி என்பவர் சென்றுள்ளார்.
உள்கோட்ட நடுவர் விசாரணையில் வழக்குரைஞர் வக்காலத்து வாங்க முடியாது என சார்-ஆட்சியர் பிரசாந்த் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, பரமேஸ்வரி தனது மூத்த வழக்குரைஞர் விநாயகத்திடம் சென்று முறையிட்டுள்ளார். இதையடுத்து விநாயகம், சார்-ஆட்சியர் அலுவலகத்துக்கு விசாரணைக்குச் சென்றபோது, அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சார்-ஆட்சியரின் இந்தச் செயலைக் கண்டிப்பதாகக் கூறி, விருத்தாசலம் வழக்குரைஞர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.