Enable Javscript for better performance
இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே உள்ள கூழையாறு புயல் பாதுகாப்பு மையத்தில் இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு, சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்துப் பேசியதாவது: வருகிற ஆக. 4-ஆம் தேதி மாதிரி பேரிடர் ஒத்திகைப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 
    கடலூர் மாவட்டம் புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. எனவே, பேரிடர் காலங்களில் அதை எதிர்கொள்வது, உடைமைகள், கால்நடைகளைப் பாதுகாப்பது, தொற்று நோய் பரவாமல் தடுப்பது குறித்து பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை அவசியம். 
    பேரிடம் காலங்களில் மரங்களை அப்புறப்படுத்துவது, குடிநீர், உணவு வழங்கும் பணிகளை விரைந்து செய்வது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
    தமிழக அரசு பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி வருவாய், பேரிடர் மேலாண்மை - தணித்தல் துறையின் மூலமாக TN SM​A​RT என்ற செல்லிடப்பேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை தங்களது செல்லிடப்பேசியில்  உள்ள  G‌o‌o‌g‌l‌e 
    P‌l​a‌y S‌t‌o‌r‌e-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
    இந்தச் செயலி மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன், விருத்தாசலம் உதவி ஆட்சியர் பிரசாந்த், சுகாதாரத் துறை துணை இயக்குநர் கீதா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆனந்தன், வேளாண் உதவி இயக்குநர் வேல்விழி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, வட்டாட்சியர் ஹரிதாஸ், பேரிடம் மேலாண்மை வட்டாட்சியர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai