Enable Javscript for better performance
காவல் நிலையத்திலிருந்து கைதி தப்பியோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் கடந்த 22-ஆம் தேதி கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிற்காமல் சென்ற காரை துரத்திச் சென்று நெல்லிக்குப்பம் அருகே மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததுடன், போலியான பதிவெண் கொண்ட கார் என்பதும் தெரிய வந்தது. 
    இதையடுத்து, காரில் வந்தவர்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிறப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 
    அப்போது, காவலிலிருந்த கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் துரை (எ) மந்திரமூர்த்தி (24) தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
    இதுகுறித்து   உயரதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் அளித்து தப்பியோடியவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் கூறியதாவது: போலி பதிவெண் கொண்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது சாதாரண பிரிவு வழக்குதான். எனவே, கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai