Enable Javscript for better performance
குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் வழங்கக் கோரி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே குண்டியமல்லூர் கிராம மக்கள் புதன்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குறிஞ்சிப்பாடி ஒன்றியம்,  குண்டியமல்லூர் ஊராட்சியில்
      உள்ள காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து 
    வருகின்றனர். இங்கு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதாகிவிட்டதால், அருகில் இருந்த  மற்றொரு ஆழ்துளைக் கிணற்றில் மின் மோட்டாரை பொருத்தி, குடிநீர் விநியோகம் செய்தனராம். ஒரு சில நாள்களிலேயே அந்த ஆழ்துளைக் கிணற்றில் நீர் மட்டம் குறைந்ததால், கடந்த இரண்டு நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. 
    இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி, குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் எதிரே காலிக் குடங்களுடன் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 
    இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்பாபு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதே பகுதியில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai