Enable Javscript for better performance
குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து, கடலூரில் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்துக்கு திருப்பாதிரிபுலியூர் வழியாக வருவதற்கு ஒரு சாலையும், கடலூர் பேருந்து நிலையம் வழியாக வருவதற்கு மற்றொரு சாலையும் உள்ளன. மேலும், திருப்பாதிரிபுலியூர் பகுதியிலுள்ள சாலை வழியாகச் சென்றால் மட்டுமே பான்பரி சந்தை அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியும். இந்த நிலையில், திருப்பாதிரிபுலியூர் பகுதி வழியாகச் செல்லும் சாலையை ரயில்வே நிர்வாகம் அடைத்துவிட்டு, பேருந்து நிலையம் அருகேயுள்ள பாதையை மட்டுமே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இதனால், இரு பக்கச் சாலையானது தற்போது ஒரு பக்கச் சாலையாக சுருங்கியதுடன், அரசு மருத்துவமனைக்கு வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பொதுமக்களுக்கு நேர விரயம், அலைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
    இதைக் கண்டித்து, கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ரயில் நிலையம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி.புருஷோத்தமன், கிருஷ்ணமூர்த்தி, மாயவேல், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் மு.மருதவாணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
    ரயில் நிலையத்தின் பெயரை கடலூர் - திருப்பாதிரிபுலியூர் (அ) கடலூர் டவுன் என்று மாற்ற வேண்டும். புதுவை - விழுப்புரம் - திருப்பாதிரிபுலியூர் - கடலூர் துறைமுகம் வழியாக கோவைக்கு ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai