Enable Javscript for better performance
குப்பைகள் கொட்டும் இடமாக மாறிய குடிநீர்த் தொட்டி!- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள குடிநீர்த் தொட்டி பயன்பாடின்றி குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. 
    சிதம்பரம் மேலரத வீதியில் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் அருகிலும், தந்தை பெரியார் சிலை அருகிலும் சிதம்பரம் ஜெயின் சங்கம் சார்பில் ரூ.2 லட்சம் செவில் குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் குடிநீர்த் தொட்டிகள் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளன. இதைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. 
    குடிநீர்த்  தொட்டியானது சுவரொட்டிகள் ஒட்டப்படும் இடமாக மாறிவிட்டது. குடிநீர்க் குழாய்கள் உள்ள சிறிய அளவிலான தொட்டியில் காகித  கப்புகள், 
    புட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதுகுறித்து இந்தப் பகுதியினர் நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் பாலாஜிகணேஷ். எனவே, நகராட்சி நிர்வாகம் மேற்கூறிய குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai