Enable Javscript for better performance
சிதம்பரம் அருகே அமைந்துள்ள துறவி லட்சுமிபாய் அதிஷ்டான கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே அமைந்துள்ள துறவி லட்சுமிபாய் அதிஷ்டான கோயில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே மகா கைலாயம் என்ற இடத்தில் அமைந்துள்ள துறவி லட்சுமிபாய் அதிஷ்டானம் மற்றும் சகஸ்ரலிங்க கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
    புதுச்சேரி ஓங்காரனந்தா ஆசிரமத்தில் ஜீவ முக்தி பெற்ற லட்சுமிபாய் அம்மாள், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மஞ்சக்குழி ஆணையாங்குப்பம் கிராமத்தில் மகா  கைலாயம் என்ற இடத்தில் கடந்த 25.7.2018 - இல் சமாதி பிரவேசம் அடைந்தார். 
    இதையடுத்து, துறவி லட்சுமிபாய்க்கு புதுச்சேரி ஓங்காரனந்தா ஆசிரமம் சார்பில், அதிஷ்டான கோயில் மற்றும் சகஸ்ரலிங்க கோயில் எழுப்பட்டது. இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஓங்காரனந்தா சுவாமிகள் தலைமையில், தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், கணபதி ஹோமத்துடன் கடந்த 21- ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்றது.
    இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை 6 - ஆம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதியும் ஆகியவை நடைபெற்றன. பின்னர், அதிகாலை 4 மணிக்கு கடம் புறப்பாடுடன்  மூலஸ்தான விமான கலசத்துக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், ரிஷிகேஷியில் இருந்து கங்கா தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன.
    கும்பாபிஷேக விழாவை ஓங்காரனத்தா சுவாமிகள் தலைமையில், தவத்திரு கலவை சச்சிதானந்தா சுவாமிகள், காமாட்சிபுரம் ஆதீனம் ஞானகுரு சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
    தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் தியான மண்டபத்தைத் திறந்து வைத்து, தியானம் மேற்கொண்டார். கலவை சச்சிதானந்த சுவாமிகள் துறவி லட்சுமிபாய் ஆன்மிக அறக்கட்டளையைத் தொடக்கி வைத்தார். 
    விழா ஏற்பாடுகளை சிவத்திரு குமார்ராகவன், கே.விஜயராகவன், ஓம் ஞானேஸ்வரி, சுவாமி கோடீஸ்வரானந்தா, சர்வாத்மானந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    இதைத் தொடர்ந்து சாதுக்கள், சந்நியாசிகள் ஆன்மிகப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் ஞானகுரு சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள், மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், மூத்த வழக்குரைஞர் முருகமாணிக்கம், நா.கே.முருகன், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி முதல்வர் நாகராஜன், குமரராஜன், கோடீஸ்வரானந்தா, ஓம் ஞானேஸ்வரி அம்மாள், வழக்குரைஞர் நீதிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். 
    கூட்டத்தில் இந்தியாவை மகாபாரதம் என்று மத்திய அரசு சட்டப்பூர்வமாக பிரகடனப்படுத்த வேண்டும், ஐ.நா. சபை இந்தியாவை ஆன்மிக (அ) தெய்வீக நாடு என பிரகடனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai