Enable Javscript for better performance
மலேசியப் பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    மலேசியப் பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி ஒப்பந்தம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், மலேசிய நாட்டின் மாஹச பல்கலைக்கழகமும் மருந்தாக்கவியல் துறை, மருத்துவப் புலம் மற்றும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி, பயிற்சி, மாணவர்கள் பரிமாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ஏதுவாக புதன்கிழமை கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தர் வே.முருகேசன் முன்னிலையில், பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் என்.கிருஷ்ணமோகன், மாஹச பல்கலைக்கழக மருந்தாக்கவியல் பேராசிரியர் வெற்றிவேல் சுப்பிரமணியன் ஆகியோர் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவப் புல முதல்வர் ராஜ்குமார், மருத்துவக் கண்காணிப்பாளர் சண்முகம், மருந்தாக்கவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.பி.மோகந்தா, பேராசிரியர்கள் பி.கே.மன்னா, சி.க.தனபால், தேசிய - பன்னாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரகதீஸ்வரன், முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குநர் பேராசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் சி.க.தனபால் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai