Enable Javscript for better performance
மாடித் தோட்ட காய்கறி சாகுபடிப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மாடித் தோட்ட காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    வேளாண் திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.கண்ணன் தலைமை வகித்தார். தோட்டக்கலைத் துறை  உதவிப் பேராசிரியர் ரா.ஜெகதீசன் பங்கேற்று, மாடித்தோட்டம் அமைப்பது, பராமரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார். 
    வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் க.நடராஜன் (விதை நுட்பவியல்), முனைவர் க.வேங்கடலட்சுமி (உழவியல்), முனைவர் கு.பொற்கொடி (மண்ணியல்), முனைவர் ம.பாலரூபிணி (வேளாண் விரிவாக்கம்) ஆகியோர் பயனாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai