Enable Javscript for better performance
மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லிக்குப்பம் பகுதிக் குழு இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கத்தின் பகுதிக் குழுத் தலைவர் எப்.ஜென்மராக்கினி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் ஏ.சரஸ்வதி, முத்துலட்சுமி, துணைச் செயலர்கள் எம்.தேவகுரு, ஆர்.மீரா ஆகியோர் பேசினர்.
    சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.சிவகாமி, பகுதிக் குழு துணைத் தலைவர் எஸ்.சந்திரா, செயலர் டி.ஜெயபிரதா, பொருளாளர் எஸ்.ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ஆர்ப்பாட்டத்தில் ஊரக வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தி, தினக் கூலியாக ரூ. 229 வழங்க வேண்டும். சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளைக் கட்டித் தர வேண்டும். 
    திருமண உதவித்தொகை, 2 பெண் குழந்தைகள் உதவித் தொகை உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பதாரர்களிடம் கட்டாய கையூட்டு கேட்கும் அண்ணாகிராமம் ஒன்றிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai