Enable Javscript for better performance
மேம்படுத்தப்பட்ட நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மேம்படுத்தப்பட்ட நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

    By DIN  |   Published on : 25th July 2019 07:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட நெல் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட உள்ளது.
    இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்துள்ள விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில்  மேம்படுத்தப்பட்ட நெல் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. 
    இந்தப் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 29-ஆம் தேதிக்குள் 99943 15004 என்ற செல்லிடப்பேசியை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai