Enable Javscript for better performance
வீரட்டானேஸ்வரர் கோயிலில் நாளை ஆடிப்பூர கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவ கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.
    இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி பிரம்மோத்ஸவம் மற்றும் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் முக்கியமானதாகும். விழாவின் 9-ஆம் நாள் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெறும்.
    30 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர்: இந்தக் கோயிலில் இருந்த அம்பாள் (சிறிய) தேர் முற்றிலும் சிதலமடைந்ததால், கடந்த 30 ஆண்டுகளாக  தட்டுத் தேரில் அம்பாள் வீதி உலா நடைபெற்று வந்தது. இந்த முறை புதிய தேர் செய்யப்பட்டு, வெள்ளோட்டம் நடைபெற்றுள்ள நிலையில், பெரியநாயகி அம்பாள் புதிய திருத்தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வரவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai