முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
டாஸ்மாக் கடையில் திருட்டு
By DIN | Published On : 30th July 2019 07:26 AM | Last Updated : 30th July 2019 07:26 AM | அ+அ அ- |

திட்டக்குடி அருகே டாக்மாக் கடை கதவை உடைத்து மதுப் பட்டிகள் திருடப்பட்டுள்ளன.
திட்டக்குடியை அடுத்துள்ள ராமநத்தத்தில் காவல் நிலையம் அருகே அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. திங்கள்கிழமை காலை அந்தப் பகுதி வழியாகச் சென்றவர்கள் கடையின் பூட்டு உடைந்திருப்பது குறித்து ராமநத்தம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் மதுப் புட்டிகளை திருடி கடையின் அருகிலேயே அமர்ந்து குடித்ததோடு, மேலும், ஏராளமான மதுப் புட்டிகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
அதேபோல, அருகே கீழ்கல்பூண்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. எனினும், திருட்டு நடைபெறவில்லையாம். பூட்டை உடைக்கும்போது பொதுமக்கள் நடமாட்டம் இருக்கவே திருடாமல் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.