முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
பரவலான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 30th July 2019 07:26 AM | Last Updated : 30th July 2019 07:26 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தாலும், மழை இல்லாததாலும் நெல், வாழை, கரும்பு,
மரவள்ளி மற்றும் காய்கறிப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. கால்நடைகள் குடிநீரின்றி தவித்தன. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலால் ஏற்கெனவே வாடியிருந்த பயிர்கள் மழையால் செழிப்படைந்துள்ளன. இதனால், இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக மழையில்லாத நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பூமி குளிர்ந்துள்ளது. இந்த மழையானது நாட்டு கம்பு, மானாவாரி மணிலா, உளுந்து, தட்டை பூண்டு, சணப்பை விதைப்புக்கு ஏற்றதாகும் என்றார் அவர்.