முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
பான்பரி சந்தையில் வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு
By DIN | Published On : 30th July 2019 07:31 AM | Last Updated : 30th July 2019 07:31 AM | அ+அ அ- |

கடலூர் பான்பரி சந்தையில் வாடகை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் செயல்பட்டு வரும் பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
சங்கத் தலைவர் ஜி.ஆர்.பார்த்தீபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர் ஆகியோர் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பான்பரி சந்தையில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் கடலூர் பெருநகராட்சிக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டில் நகராட்சி நிர்வாகம் குழு அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் வாடகையை 6 முதல் 10 மடங்குகள் வரை உயர்த்தி உள்ளது. அதாவது, மாதம் ரூ.480 வசூலிக்கப்பட்டு வந்த கடைக்கு ரூ.4,800 கேட்கப்படுகிறது. அதனை உடனடியாக கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியிலிருந்து கணக்கிட்டு செலுத்த வேண்டுமென வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரயில்வே சுரங்கப் பாதை, பேருந்து நிலைய வழிப் பிரச்னை ஆகியவற்றால் பான்பரி சந்தையில் கடை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் வாடகையை உயர்த்த வேண்டாம் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.