சுடச்சுட

  

  குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் கூடாது: ஆட்சியரிடம் மனு

  By DIN  |   Published on : 13th June 2019 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கக் கூடாது என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
  கடலூர் பாதிரிக்குப்பம் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் பி.அழகர்தேவநேசன், பொதுச் செயலர் பி.அப்பாதுரை ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் அளித்த மனு கூறியிருப்பதாவது:
  கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் கிராமத்துக்கு உள்பட்ட எல்லையில் கூட்டுறவு நகர் அமைந்துள்ளது. இங்கு, சுமார் 3 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கூட்டுறவு நகர் நடுப் பகுதியில் தனியார் இடத்தில் மிகப் பெரிய அளவில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.
  இவ்வாறான கோபுரங்கள் புயலின் போது சாய்ந்தால் அதிக உயிர் சேதம் ஏற்படும். மேலும், கோபுரம் அமைய உள்ள பகுதியில் சாதாரண மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கே பல நாள்களாகும். அங்கு, கோபுரம் அமைக்கப்பட்டால் மழை நீராலும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.  எனவே, பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai