சுடச்சுட

  


  விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 17-ஆம் தேதி குறுவை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
  இதுகுறித்து வேளாண் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருத்தாசலம் வேளாண்அறிவியல் நிலையத்தில் வருகிற 17-ஆம் தேதி குறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் கால நிலை சார்ந்த பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
   இந்தப் பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், உரமிடுதல், களைக் கட்டுப்பாடு, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். 
  பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு  வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் முன்னோடி விவசாயிகள், பெண் விவசாயிகள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
  மேலும், விவரங்களுக்கு "திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்' என்ற முகவரியிலும், 04143 - 238353 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai