சுடச்சுட

  


  கடலூர் மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களிலும் குறுவட்டம் வாரியாக ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. 
  அதன்படி, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. 
  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் ர.பானுகோபன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். 
  திட்டக்குடி வட்டாட்சியர் புகழேந்தி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஜமாபந்தி மேலாளர் விஜயா, மண்டல துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் குமரன் உள்ளிட்டோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர். 
  திட்டக்குடி, தி.இளமங்கலம், கோடங்குடி, எழுமாத்தூர், ஈ.கீரனூர், மேலாதனூர், கீழாதனூர், ஆவினங்குடி, பட்டூர், நெய்வாசல், நிதிநத்தம், நாவலூர் ஆகிய கிராம மக்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது. முகாமில் பட்டா மாற்றம், உள்பிரிவு மாற்றம், பல்வேறு உதவித் தொகைகள் கோரி  236 மனுக்கள் பெறப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai