சுடச்சுட

    


    கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் புதன்கிழமை பெட்டிக் கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    பண்ருட்டி வ.உ.சி. தெருவில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி (45). திருமணமாகாத இவர், அங்கு பெட்டிக் கடை நடத்தி வந்தார். கடந்த 6.11.2018 அன்று அதே பகுதியில் வசிக்கும் திமுக பிரமுகர் குணாவின் மகன் ஷியாம் சுந்தரை (21) சுந்தரமூர்த்தி கத்தியால் குத்திக் காயப்படுத்தினாராம். இந்த வழக்கில், பண்ருட்டி போலீஸார் சுந்தரமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுந்தரமூர்த்தி பிணையில் வெளியே வந்தார். புதன்கிழமை காலை சப்பாணித் தெரு, தங்க நகை வியாபாரிகள் சங்கக் கட்டடம் அருகே நடந்து சென்ற போது, அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், பண்ருட்டி டி.எஸ்.பி. 
    கோ.நாகராஜன், காவல் ஆய்வாளர் ப.சண்முகம்  ஆகியோர் விசாரணை நடத்தினர். சுந்தரமூர்த்தியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக சுந்தரமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    இதுகுறித்து கொலை செய்யப்பட்ட சுந்தரமூர்த்தியின் அண்ணன் அப்பர்சாமி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: 
    வீட்டுமனை தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, திமுக பிரமுகரான குணசேகரன், அவரது மகன் ஷியாம் சுந்தர்  உள்ளிட்ட 4 பேர், ஆள்களை வைத்து சுந்தரமூர்த்தியை கொலை செய்ததாக அந்த புகாரில் கூறியுள்ளார்.
    அதன் பேரில், பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் ஷியாம் சுந்தர்  மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai