சுடச்சுட

    

    ரயில்வே மேம்பாலத்தில் மண் மூட்டைகளால் விபத்து அபாயம்!

    By DIN  |   Published on : 13th June 2019 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சிதம்பரம் அண்ணாமலைநகர் ரயில்வே மேம்பாலத்தில் சாலையில் நடுவே வைக்கப்பட்ட மண் மூட்டைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
    இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சாலையோரத்தில் பொதுப் பணித் துறை ஊழியர்கள் அண்மையில் சுத்தம் செய்தனர். அப்போது, சேகரித்த மண் குவியலை சாக்கு மூட்டையில் கட்டி பாலத்தின் மையப் பகுதியில் வரிசையாக வைத்து விட்டு சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாற்றத்துடன் வாகனத்தை இயக்க வேண்டியுள்ளது. விபத்துக்களும் நேரிடுகின்றன. குறிப்பாக, இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மண் மூட்டைகள் மீது மோதி  கீழே விழுந்து காயமடைகின்றனர்.  மேலும், மேம்பாலத்தில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லை எனவும் புகார் கூறப்படுகிறது.
    எனவே, மண் மூட்டைகளை உடனடியாக அகற்றிவிட்டு, மேம்பாலத்தில் மின்விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai