திருமாவளவன் எம்.பி.யாக பதவியேற்பு: வி.சி.க.வினர் கொண்டாட்டம்
By DIN | Published On : 18th June 2019 09:34 AM | Last Updated : 18th June 2019 09:34 AM | அ+அ அ- |

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதி எம்.பி.யாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி எம்.பி.யாக துரை.ரவிக்குமார் ஆகியோர் திங்கள்கிழமை மக்களவையில் பதவியேற்றதை அடுத்து, சிதம்பரத்தில் அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
சிதம்பரம் தெற்கு ரத வீதியில் மாவட்ட நிர்வாகி பெரு.திருவரசு தலைமையில், மாநில துணைச் செயலர் கோ.நீதிவளவன், குறிஞ்சிவளவன், பேராசிரியர் செல்லபானு, ஆசிரியர் மு.கணேசன், நகரச் செயலர்கள் க.ஆதிமூலம், பாவானன், நாகராணி, வெற்றிவேந்தன், ரவிவர்மன், கிருபாநிதி, சிவராஜ், இன்பவளவன், சிற்றரசு, வெளிச்சம் மாறன், அம்பேத் வளவன் உள்ளிட்டோர் பாட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.