மணப்பெண்ணிடம் நகை திருட்டு
By DIN | Published On : 18th June 2019 09:36 AM | Last Updated : 18th June 2019 09:36 AM | அ+அ அ- |

மணப்பெண்ணிடம் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கடலூர் அருகே உள்ள செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு (60). இவரது மகளின் திருமண நிகழ்ச்சி கடலூரில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, ஒப்பனை முடிந்த பின்னர் மணமகள் கழற்றி வைத்திருந்த ஆறேகால் பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து, ராமு அளித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக ஒப்பனை பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.