அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கும் விழா 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பன்னாட்டு மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கும் விழா பல்கலைக்கழக டெக்பார்க் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பன்னாட்டு மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கும் விழா பல்கலைக்கழக டெக்பார்க் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 பன்னாட்டு தொடர்பு மைய இயக்குநர் டி.ராம்குமார் தனது தொடக்க உரையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அயல்நாட்டு மாணவர்களுக்கான கல்வி வசதிகளை விவரித்தார்.
 தற்போது பல்கலைக்கழகத்தில் 31 நாடுகளைச் சேர்ந்த 317 மாணவ, மாணவிகள் பட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து வருவதாகவும், இவர்களில் நிகழாண்டு படிப்பை நிறைவு செய்த 72 மாணவ, மாணவிகள் படிப்பு நிறைவுச் சான்றிதழ் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
 விழாவில் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் வேளாண் புல மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியுடன் அதைச் சார்ந்த தனித் திறமைகளையும் வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றார்.
 மொழியியல் புல முதல்வர் வி.திருவள்ளுவன், பதிவாளர் என்.கிருஷ்ணமோகன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.செல்வநாராயணன், கலைப்புல முதல்வர் இ.செல்வராஜன், அறிவியல் புல முதல்வர் எஸ்.கபிலன், கடல்வாழ் உயிரின அறிவியல் புல முதல்வர் எம்.சீனிவாசன், பொறியியல் புல முதல்வர் கே.ரகுகாந்தன், கல்வியியல் புல முதல்வர் ஆர்.ஞானதேவன், நுண்கலைப்புல முதல்வர் கே.முத்துராமன், வேளாண்புல முதல்வர் சாந்தா கோவிந்த், தொலைதூரக் கல்வி இயக்குநர் எம்.அருள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com