ஜமாபந்தியில் குவியும் மனுக்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் கடந்த 11-ஆம் தேதி முதல் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் கடந்த 11-ஆம் தேதி முதல் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது.
 கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை களையூர், இரண்டாயிரம் விளாகம், திருப்பணாம்பாக்கம், கரைமேடு, உள்ளேரிப்பட்டு, பள்ளிப்பட்டு, மலையபெருமாள்அகரம், நல்லாத்தூர், மேலக்குப்பம், தூக்கனாம்பாக்கம், தென்னம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி, கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ தலைமையில் நடைபெற்றது. இதுவரை 5 நாள்கள் நடைபெற்ற முகாமில் சுமார் ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 85 பேருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
 நிகழ்ச்சியில், வட்டாட்சியர் கோ.செல்லக்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ச.அசோகன், மண்டல துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜேஷ்பாபு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் வசந்தி, தலைமை நில அளவர் திருமலை மற்றும் வருவாய் ஆய்வர்கள், இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 ஜமாபந்தியில் புதன்கிழமை கீழ்குமாரமங்கலம், ஒடலப்பட்டு, மேல், கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மதலப்பட்டு, புதுக்கடை, வடபுரம் கீழ்பாதி, சிங்கிரிகுடி, கிளிஞ்சிக்குப்பம், செல்லஞ்சேரி, காரணப்பட்டு ஆகிய கிராமங்களுக்கும், வியாழக்கிழமையன்று காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், ஆலப்பாக்கம், கம்பளிமேடு, தியாகவல்லி, திருச்சோபுரம், பச்சையாங்குப்பம், பொன்னியாங்கும் கிராமங்களுக்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com