கோகுல மக்கள் கட்சி பொதுக்கூட்டம்
By DIN | Published On : 24th June 2019 07:35 AM | Last Updated : 24th June 2019 07:35 AM | அ+அ அ- |

கோகுல மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டம் மற்றும் விருத்தாசலம், மங்களூர் ஒன்றியம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அழகுமுத்துகோன் 262-ஆவது குருபூஜை விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திட்டக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட தலைவர் பச்சமுத்து தலைமை வகிக்க, நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தியாகி அழகுமுத்துவின் வரலாற்றை பாட நூல்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிடில் தனித்து தேர்தலை சந்திப்போம் என்றார் அவர்.
மேற்கு மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலர் என்.கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.