நீர்நிலைகளை தூர்வார பாமக வலியுறுத்தல்
By DIN | Published On : 24th June 2019 07:35 AM | Last Updated : 24th June 2019 07:35 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என பாமக வலியுறுத்தியது.
கடலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாவட்ட செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலர்கள் இரா.சுதாகர், ராஜாராமன், சே.ராஜேந்திரன், செல்வ.சோழன், வேல்முருகன், முரளி, விஜய், நகர செயலர் ரூபக்குமார், நகர தலைவர் மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர் இரா.கோவிந்தசாமி, வன்னியர் சங்க மாநில செயலர் பு.தா.அருள்மொழி, கட்சியின் மாநில துணைத் தலைவர் ப.சண்முகம், துணைப் பொதுச் செயலர் அ.தர்மலிங்கம், செயற்குழு உறுப்பினர் ஆ.விஜயகாந்தி, இளைஞரணி நிர்வாகிகள்கோ.சந்திரசேகரன்,வெ.ரத்தினவேல் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்துவது. குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரியை மாவட்ட நிர்வாகம் தூர்வாரவில்லையெனில், அந்த ஏரியை தூர்வாருவதற்கு கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களையும் என்எல்சி நிர்வாகம் தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரிட மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் இரா.இளவரசன், தட்சிணாமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின், ரவிச்சந்திரன், ஏ.சி.மணி, நிர்வாகி துரை.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாநில இளைஞரணி துணைத் தலைவர் இள.விஜயவர்மன் வரவேற்க, நகரத் தலைவர் ரா.ரமேஷ் நன்றி கூறினார்.