ஸ்ரீஅவதூத சுவாமிகள் குருபூஜை விழா
By DIN | Published On : 24th June 2019 07:40 AM | Last Updated : 24th June 2019 07:40 AM | அ+அ அ- |

சிதம்பரம் குருஐயர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 54-ஆவது ஆண்டு குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அவதூதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்து மக்களுக்கு அருள்புரிந்து வருபவர் மகான் ஸ்ரீஅவதூத சுவாமிகள்.
அவதூத சுவாமிகளின் சதய நட்சத்திர தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அவரது அதிஷ்டானத்தில் கணபதி ஹோமம் தொடங்கியது. பின்னர் நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ருத்ரஹோமம், சமக ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
தில்லைவாழ் அந்தணர்களான நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் ஹோமங்களை நடத்தினர். பின்னர் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அதிஷ்டான அறக்கட்டளை நிர்வாகிகள் ஹரிஹரநாகநாதன், ராமச்சந்திரன், சங்கரநடராஜ தீட்சிதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.