சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி வட்டம் 24-இல் உள்ள சிஐடியூ அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை சுரங்கம்-1ஏ அருகே நடந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பாட்டாளி தொழிற் சங்க பொருளாளர் குப்புசாமி, அண்ணா தொமுச பொருளாளர் ரங்கராமானுஜம், தொமுச பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக சிஐடியு பொதுச் செயலர் அமிர்தலிங்கம் பேசினார். முன்னதாக, திங்கள்கிழமை சுரங்கம்-2 , அனல்மின் நிலையம்-2 மற்றும் அனல்மின்நிலையம் -2 விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் வாயிற்கூட்டம் நடத்தினர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai