சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியர்

  By DIN  |   Published on : 26th June 2019 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் விளக்கம் அளித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 683 கிராம ஊராட்சிகளில் தற்போது 25,19,509 பேர் வசித்து வருகின்றனர். நகராட்சிகளில் வசிக்கும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 77 லிட்டர் நீரும், பேரூராட்சிகளில் வசிப்போருக்கு சராசரியாக 76 லிட்டரும் குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ஊரகப் பகுதிகளிலும் தினசரி பொதுமக்களுக்கு 55 லிட்டருக்கு குறையாமல் சீரான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
   5 நகராட்சிகளில் 121 ஆழ்துளை கிணறுகள், 216 சிறுமின்விசைப் பம்புகள் மூலமும், சிதம்பரத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் நகராட்சி லாரி மூலமும் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 16 பேரூராட்சிகளில் 188 ஆழ்துளைக் கிணறுகள், 899 கைப்பம்புகள், 255 சிறுமின் விசைப்பம்புகள் மற்றும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
   683 ஊராட்சிகளுக்கு 4,275 பவர் பம்புகள், 3,850 மினி பவர் பம்புகள், 9,641 கைப்பம்புகள், 13 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் நாள்தோறும் 2 முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.5 நகராட்சிகளில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.1.18 கோடியில் 38 குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை பொறுப்பு நிதியில் ரூ.1.70 கோடியில் 21 குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
   பேரூராட்சிகளில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் ரூ.1.51 கோடியில் 18 குடிநீர்த் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின்கீழ் ரூ.22.48 கோடியில் 607 குடிநீர்த் திட்டப் பணிகள் அனுமதிக்கப்பட்டு, 407 பணிகள் நிறைவுற்றுள்ளன. மேலும், ரூ.1.85 கோடியில் 26 குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
   ஊரகப் பகுதிகளில் இதுவரை 24,384 முறையற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் 18,865 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குடிநீர் குழாய்களில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மொத்தம் 761 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் குறைகளை பொதுமக்கள் 1800 4251 941 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai