சுடச்சுட

  

  தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9.71 லட்சம்

  By DIN  |   Published on : 26th June 2019 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.9 லட்சத்து 71 ஆயிரம் கிடைத்துள்ளது.
   இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் ஜே.ராஜசரவணக்குமார், ஆய்வாளர் ப.சீனுவாசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, ராஜ்குமார், முத்துக்குமரன், ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 9 லட்சத்து 71ஆயிரத்து 366 ரூபாய் கிடைத்தது. மேலும் தங்கம் 31 கிராம், வெள்ளி 128 கிராம், வெளிநாட்டு பணம் கத்தார் ரியால் -12, மலேசியா ரிங்கட்-138, சிங்கப்பூர் டாலர்-5, அமெரிக்க டாலர்- 11, யூரோ டாலர்- 125, சவூதி ரியால்- 11 உள்ளிட்டவை இருந்தன

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai