சுடச்சுட

  

  நீர்நிலைகளைத் தூர்வாரக் கோரி மனித நேய மக்கள் கட்சியினர் திட்டக்குடி வட்டாட்சியரிடம் அண்மையில் மனு அளித்தனர்.
   தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட துணைச் செயலர் சாகுல்அமீது திட்டக்குடி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது: திட்டக்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சரிவர மழை இல்லாததால் குடிநீர் பிரச்னை எழுந்துள்ளது. இதை சரிசெய்யக் கோரி பல்வேறு கட்சியினரும் போராட்டங்கள் நடந்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
   ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் போன்றவற்றை தூர்வார அரசு அலுவலர்கள் முன்வராததால், மழை பெய்தால்கூட தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தினார். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai