நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு
By DIN | Published On : 28th June 2019 08:22 AM | Last Updated : 28th June 2019 08:22 AM | அ+அ அ- |

சிறுபாக்கம் அருகே நாய்கள் கடித்ததில் புள்ளி மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.
சிறுபாக்கத்தில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காட்டில் மான்கள் அதிகளவில் வசிக்கின்றன. தற்போது வறட்சியான சூழல் நிலவும் நிலையில், மான்கள் குடிநீர், உணவுக்காக வனப் பகுதியிலிருந்து வெளியேறி கிராமங்களுக்குள் நுழைகின்றன. அவ்வாறு வரும் மான்கள் வாகனங்கள் மோதியும், நாய்கள் கடித்தும் உயிரிழப்பது தொடர்கிறது.
இந்த நிலையில், பனையாத்தூர் ஏரிக்கரைக்குச் செல்லும் பாதையில் வியாழக்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் ஆண் புள்ளி மான் உயிரிழந்தது .
இதுகுறித்து தகவலறிந்த வனத் துறை அலுவலர் செல்லப்பாண்டியன் நிகழ்விடத்துக்கு வந்து மானை பார்வையிட்டார்.
பின்னர், கால்நடை மருத்துவர் மூலம் மானின் சடலம் உடல்கூறாய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.