ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2019 08:58 AM | Last Updated : 04th March 2019 08:58 AM | அ+அ அ- |

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் கடலூர் கிழக்கு மாவட்டத்தின் 19- ஆவது அமைப்பு தினக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சங்கத்தின் கடலூரில் மாவட்டத் தலைவர் ஏ.ரங்கநாதன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாநிலச் செயலர் ஆர்.அபரஞ்சி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மத்திய அரசின் ஊழியர்களுக்கு வழங்குவது போல, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும்.
மருத்துவப் படியாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும்.
குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 1.50 லட்சமாக உயர்த்துதல், ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்குதல், 21 மாத நிலுவை ஓய்வூதியத்தை உடனே வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிர்வாகிகள் மா.வையாபுரி, சி.மரியதாஸ், வே.கந்தசாமி, கே.கோதண்டராமன், து.லட்சுமிநாராயணன், என்.வி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கத்தின் மாவட்டச் செயலர் கோ.இளங்கோவன் வரவேற்றார்.
பொருளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.