பைக்குகள் மோதல்: விவசாயி சாவு
By DIN | Published On : 08th March 2019 08:59 AM | Last Updated : 08th March 2019 08:59 AM | அ+அ அ- |

மந்தாரக்குப்பம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம், டி.வி.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (46). இவரது தம்பி செல்வக்குமார் (40), விவசாயி. இவர் புதன்கிழமை தனது மனைவியை பைக்கில் அழைத்துக்கொண்டு பெரியாகுறிச்சியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
காமராஜ் நகர் அருகே சென்றபோது இவரது பைக், எதிரே வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் செல்வக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கடாஜலபதி அளித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.