மாணவர்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 08th March 2019 09:00 AM | Last Updated : 08th March 2019 09:00 AM | அ+அ அ- |

ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற காட்டுமன்னார்கோவில் ஜி.கே. பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
கடலூர் மாவட்ட அளவில் கடந்த 24 -ஆம் தேதி ரோலர் ஸ்கேட்டில் போட்டி நடைபெற்றது. இதில் ஜி.கே. பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் 7 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்று அவர்கள் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பதக்கம் வென்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் ஜி.கே. குமாரராஜா, மேலாண்மை இயக்குநர் ஜி.கே.அருண் ஆகியோர் பாராட்டினர் (படம்). பள்ளி முதல்வர் ரமா, பயிற்சியாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.