சுடச்சுட

  

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
  இந்த நிலையில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை  கையெழுத்து இயக்கம் நடத்தினர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த  வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். 
  இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்தக் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஒரே நாளில் 800 பேர் கையெழுத்திட்டனர். இந்தக் கையெழுத்துகள் அனைத்தும் மனுவுடன் இணைத்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai