சுடச்சுட

  

  தேர்தல் பணியில் பாரபட்சம் காட்டக் கூடாது: காவல் துறையினருக்கு டி.ஐ.ஜி. அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 16th March 2019 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் பாரபட்சத்துடன் நடந்து கொள்ளக் கூடாது என்று டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் அறிவுறுத்தினார்.
  மக்களவைத் தேர்தலையொட்டி, கடலூர் மாவட்டக் காவல் துறையினரின் செயல்பாடுகளை ஆராயும் வகையில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:
  தேர்தலை எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடத்த காவல் துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். காவல் துறை அதிகாரிகள் பாரபட்சமின்றி, தேர்தல் பணிகளைக் கவனிக்க வேண்டும். அந்ததந்த காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகள் தங்களது காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
  ஏதேனும் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், விரைவாக சென்று பிரச்னையைத் தீர்க்க வேண்டும். மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து காவல் துறை அதிகாரிகளும் கட்டாயம் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.
  முன்னதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
  கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் க.சாந்தி, ஸ்ரீதரன், தனிப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai