சுடச்சுட

  

  பொள்ளாச்சி சம்பவம்: இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 16th March 2019 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  இந்திய மாணவர் சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். 
  வட்டத் தலைவர் பரமசிவம், வட்டத் துணைச் செயலர் ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வகுமார்,  மாதர்  சங்கத்தின் மாவட்டச் செயலர் தேன்மொழி, நிர்வாகி அன்புச்செல்வி, இந்திய மாணவர் சங்க வட்டச் செயலர் வசந்த், நிர்வாகி சிவகாமி உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.       
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai