சுடச்சுட

  

  விருத்தாசலம் அருகே மொபெட் மீது லாரி மோதல்: தந்தை, மகன் சாவு

  By DIN  |   Published on : 16th March 2019 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மொபெட் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
  குறிஞ்சிப்பாடியை அடுத்த கல்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல் (45), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (40). இவர்களது மகன் தமிழ்மாறன் (10).
  உடல் நிலை சரியில்லாத பரமேஸ்வரியை சிகிச்சைக்காக விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாயவேல் வெள்ளிக்கிழமை மொபெட்டில் அழைத்துச் சென்றார். மகன், மனைவியுடன் அதே மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
  கடலூர் - விருத்தாசலம் சாலையில் அரசக்குழி என்ற இடத்தின் அருகே வந்த போது, அங்கு வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபெட்  மீது மோதியது. இந்த விபத்தில் மாயவேலும், தமிழ்மாறனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பரமேஸ்வரி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  தகவலறிந்த ஊ.மங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai