சுடச்சுட

  


  என்எல்சி இந்தியா சார்பில் நிறுவனங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுதல் குறித்த 2 நாள் தேசியக் கரத்தரங்கம் கற்றல் மற்றும் மேம்பாட்டு மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. 
  என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதித் துறை சார்பில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தேசியக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு  வருகின்றன. நிகழாண்டுக்கான கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் பேசியதாவது:  
  தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களால் பெரு நிறுவனங்கள் கடுமையான போட்டிகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் அனல் மின் உற்பத்தித் துறை மிகுந்த போட்டிகளை  எதிர்கொண்டுள்ளது. போட்டிமிக்க வர்த்தகச் சூழலை எதிர்கொள்ள உரிய வழிமுறைகளை ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்தக் கருத்தரங்கம் இதற்கான தீர்வுகளைக் கண்டறியும்  சிறந்த தளமாக அமையும் என்றார்  அவர். 
  இந்திய விலை மற்றும் மேலாண்மை கணக்காயர் நிலையத்தின் தேசிய தலைவர் அமித் ஆனந்த் ஆப்தே கருத்தரங்கை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதித் துறை இயக்குநர் சுஜாதா ஜெயராஜ், குதிரமூக் இரும்புத் தாது நிறுவன நிதித் துறை இயக்குநர் ஸ்வப்பன் குமார் ஹோரை, பிடிசிஏ நிறுவன நிதித் துறை இயக்குநர் எஸ்.குணசேகரன், விலை மற்றும் மேலாண்மை கணக்காயர் நிலையத்தின் தென்மண்டல செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் ஆகியோர் பங்கேற்றனர். 
  என்எல்சி மின் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் நாதள்ள நாக மகேஸ்வர் ராவ் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். மின்னணு வடிவிலான விழா மலர்  வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் நவரத்னா, மகாரத்னா தகுதி பெற்ற மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai