சுடச்சுட

  


  தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர்களின் மண்டல அளவிலான கருத்தரங்கம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.  
  நிகழ்ச்சிக்கு, நிர்வாகி பி.குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஆர்.மனோகரன் வரவேற்று பேசினார். மாநில செயலர்கள் டி. புருஷோத்தமன், ஏ.பக்கிரிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போக்குவரத்துத் துறை ஒய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச் செயலர் கே.கர்சன் நாடும் நாமும் என்ற தலைப்பிலும், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில பொதுச் செயலர் ஜி.சுகுமாறன் மக்களும், எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
  அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கடலூர் கோ. பழனி, விழுப்புரம் ஆர்.தியாகராஜன், கு.அய்யாக்கண்ணு, விருத்தாசலம் ஜி.வீராசாமி, தொ.கேசவன், போக்குவரத்து நல அமைப்பு ஜி.ராமச்சந்திரன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு டி.வெங்கடாசலம், குடிநீர் வடிகால் ஓய்வூதியர் சங்க பொறியாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பி.வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய  அனைவரையும் கைது செய்து தண்டனை வழங்கிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஏ.சகாதேவன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai