சுடச்சுட

  


  கடலூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் சொலாரா ஆக்டிவ் பார்மா சையின்சஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில், 48 -ஆவது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  விழாவுக்கு நிறுவனத்தின் துணைத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். பாதுகாப்புத் துறை அதிகாரி பாபுராஜன் வரவேற்றார். 
  சுகாதாரம் - பாதுகாப்புத் துறை இணை இயக்குநர் முகமது கனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.
  சுகாதாரம் - பாதுகாப்புத் துறை இணை சிறப்பு ஆய்வாளர் (ஓய்வு) மகாலிங்கம் வாழ்த்திப் பேசினார்.
  அரசுப் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொணடனர். மனித வளத் துறைத் துணைப் பொது மேலாளர் ரகுபதி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai