சுடச்சுட

    


    சிதம்பரம் கோட்டக் காவல் துறை சார்பில், தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சிதம்பரம் கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்து, தேர்தலின் போது, காவல் துறையினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவை குறித்து விளக்கினார்.
    துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பழனிசுவாமிநாதன் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் இயக்கம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் கருவியின் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கமளித்தார். 
    கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் சுந்தரேசன் (அண்ணாமலை நகர்), சி.முருகேசன் (சிதம்பரம்), அமுதா (புதுச்சத்திரம்), இ.கிருஷ்ணவேணி (அனைத்து மகளிர் காவல் நிலையம்), சிதம்பரம் உள்கோட்டக் காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai