சுடச்சுட

  


  சிதம்பரம் உள்கோட்ட காவல் துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகள், அந்த வளாகத்தில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.
  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்ட மதுப் புட்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 
  அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ரூ. 50ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகளை சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் - 2 நீதிபதி பார்த்திபன் அழிக்க உத்தரவிட்டார்.
  இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில்  மதுப் புட்டிகள் அழிக்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai